தமிழ் எழுத்துக் களத்தில் கல்கி, சாண்டில்யன் முதலான மிகப்பெரிய ஜாம்பவான்களுக்கு எனது இந்த சினேகதாசனின் கண்ணி முயற்ச்சியில் உருவான இந்த புதினத்தை சமர்ப்பிக்கிறேன்........ இந்த கற்பனைக்களம் எனது மனதை கவர்ந்த சோழர்களின் ஆட்சிக் காலத்தில் நடப்பது போல முழுக்க முழுக்க என் மன்தின் கற்பனைத் திறனில் உருவாக்கப்பட்டது. இது யாரையும் புண்படுத்த அல்ல. நான் மிகப்பெரிய சிந்தனைவாதியும் அல்ல...... எதேனும் பிழைகள் இருந்தால் மண்ணிக்கவும்..... முழுக்க முழுக்க தமிழை வளர்க்க என்னால் ஆன முயற்சி என்று சொல்வதை விட தொண்டு என்று சொல்வது உகந்தது.......
தமிழ்க்கடவுள் முருகன் மற்றும் என் அன்பு தமிழ் நண்பர்களும் எனக்கு துனை இருப்பார்கள்
முதுகில் பாய்ந்த கத்தியுடன் இளவரசியை ச்ந்தித்த வீரன் - முதல் அத்தியாயம்
அந்தி மயங்கும் மாலை...... சூரியனார் தன் கதிர்களின் கோபாவேசத்தை அடக்கி தண் செங்கதிர்களில் குளுமை கூட்டி இதற்கு மேல் முதுகில் கத்தி பாய்ந்துள்ள இவனை நாமும் வதைக்ககூடாது எண்று எண்ணி தன்மாணமுள்ள அவன் தன் முகத்தை வெக்கம் எனும் சந்தண சாயம் பூசி மேற்கே மறைக்கிறான் எதற்காக இதோ நமது கதையின் நாயகனுக்காக!...........
இரு மலை முகட்டிற்க்கு நடுவே அருவி பாய்ந்து வருவதைப் போல மறையும் சூரியனில் இருந்து உருவாகும் செங்கதிர் பாயும் அழகை ரசித்தபடி அந்த மலை முகட்டின் அடிவாரத்தில் இருந்து உயர் ஜாதி அரேபியக் குதிரையின் மீது வாலிபன் ஆம் நம் கதையின் நாயகன். அந்த வீர வாலிபன் மார்பினிலே போரினால் ஏற்பட்ட வடுக்களும் சிவந்த கண்களும் ஆனால் முகத்தினில் மறவர்களுக்கே உரித்தான வீரக்களையும் சேர்ந்து தெரிந்தாலும் அதையும் மீறி அவன் முகத்தினிலே உயிர் போகும் வலியும் எங்கே தான் அரச கட்டளையை நிறைவேற்றும் முண்பே உயிர் பிரிந்து விடுமோ என்ற கவலையின் ரேகையும் சேர்ந்து அவண் முக அழகை கர்ணக் கொடுரமாக மாற்றியது. ஆனாலும் அவன் முகத்தில் சாந்தம் தெரிந்தது அதற்கு காரணமும் இல்லாமலும் இல்லை. எதிரே தெரிந்த சோழ அந்தப்புர நந்தவணம் தான் அதற்கான காரணம். மெதுவாக தன் அருமை நண்பன் கந்தன் காதினில் நாம் மிக விரைவில் இளவரசியாரை சந்தித்து அரசர் அவர்களின் ஆனையை விரைவாக நிறைவேற்ற வேண்டும் ஆனால் அந்தப்புர காவாலர்களிடம் நின்று நமது பொண்ணான நாழிகைகளை கடத்தக்கூடாது ஏன் என்றால் இந்த நிலைமையில் அவர்களில் ஒருவரைக் கூட என்னால் சமாளிக்க முடியாது எனவே மிக விரைவில் அந்தப்புர நந்தவனத்திற்கு செல் என கட்டளையிட்டு அதன் முதுகில் பெண்ணின் கூந்தல் போல அலைபாயும் அதன் குழலை இருக்கமாக பற்றியபடி படுத்துவிட்டானா அல்லது மயங்கினானா...............
தொடரும்.................
அண்பார்ந்த தமிழ் தோழர்களே இந்தப்புதினம் எனது கண்ணி முயற்சி தங்களின் அண்பான ஆதரவை மட்டும் வேண்டும் தங்களின் அண்பு தமிழ் அடிமை........ சினேகதாசன்.
No comments:
Post a Comment